Kural

திருக்குறள் #998
குறள்
நண்புஆற்றா ராகி நயம்இல செய்வார்க்கும்
பண்புஆற்றார் ஆதல் கடை
குறள் விளக்கம்
நட்புடன் நடப்பவராக இல்லாமல் தீமையானவற்றை (தமக்கு)ச் செய்பவர்களிடத்திலும் (தாம்) பண்புடன் நடந்துகொள்ள முடியாத தன்மையானது (பண்புமிக்க நல்லறிவாலருக்கு) இழுக்கானதாகும்.