குறள்

ஊக்கம் உடைமை
குறள் # 591
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதுஇல்லார்
உடையது உடையரோ மற்று
குறள் # 592
உள்ளம் உடைமை உடைமை; பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்
குறள் # 593
ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்து உடையார்
குறள் # 594
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையா நுழை
குறள் # 595
வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு
குறள் # 596
உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல்; மற்றுஅது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து
குறள் # 597
சிதைவுஇடத்து ஒல்கார் உரவோர் புதையும்பின்
பட்டுப்பாடு ஊன்றும் களிறு
குறள் # 598
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு
குறள் # 599
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்
குறள் # 600
உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கை; அஃதுஇல்லார்
மரம்;மக்கள் ஆதலே வேறு