குறள்

சிற்றினம் சேராமை
குறள் # 451
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்
குறள் # 452
நிலத்துஇயல்பால் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு
இனத்துஇயல்பது ஆகும் அறிவு
குறள் # 453
மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி; இனத்தான்ஆம்
இன்னான் எனப்படும் சொல்
குறள் # 454
மனத்து உளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துஉள தாகும் அறிவு
குறள் # 455
மனம்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனம்தூய்மை தூவா வரும்
குறள் # 456
மனம்தூயார்க்கு எச்சம்நன் றாகும்; இனம்தூயார்க்கு
இல்லைநன்று ஆகா வினை
குறள் # 457
மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்; இனநலம்
எல்லாப் புகழும் தரும்
குறள் # 458
மனநலம் நன்குஉடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப்பு உடைத்து
குறள் # 459
மனநலத்தின் ஆகும் மறுமை;மற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து
குறள் # 460
நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை; தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்