Kural

திருக்குறள் #453
குறள்
மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி; இனத்தான்ஆம்
இன்னான் எனப்படும் சொல்
குறள் விளக்கம்
மனிதர்களுக்கு இயற்கையறிவு – புலனறிவு மனத்தினால் ஏற்படுகிறது. இவன் இத்தகையவன் என்று மற்றவர்களால் சொல்லப்படுகிற சொல்லானது இனம் காரணமாக ஏற்படுகிறது.