பெரியாரைத் துணைக்கோடல்
குறள் # 441
அறன்அறிந்து மீத்த அறிவுடையார் கேண்மை திறன்அறிந்து தேர்ந்து கொளல்
குறள் # 442
உற்றநோய் நீக்கி உறாஅமை முன்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல்
குறள் # 443
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல்
குறள் # 444
தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையுள் எல்லாம் தலை
குறள் # 445
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்
குறள் # 446
தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்து இல்
குறள் # 447
இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே கெடுக்கும் தகைமை யவர்?
குறள் # 448
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானுங் கெடும்
குறள் # 449
முதல்இலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம் சார்புஇல்லார்க்கு இல்லை நிலை
குறள் # 450
பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல்

