Kural

திருக்குறள் #457
குறள்
மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்; இனநலம்
எல்லாப் புகழும் தரும்
குறள் விளக்கம்
நிலையான உயிருக்கு மனத்திலுள்ள நல்லெண்ணங்கள் இன்பத்திற்குக் காரணமான நற்செல்வங்களை ஆக்கித் தரும். நல்லாரிணக்கம் அச்செல்வங்களுடன் அனைத்து நற்புகழையும் வழங்கியருளும்.