Kural

திருக்குறள் #459
குறள்
மனநலத்தின் ஆகும் மறுமை;மற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து
குறள் விளக்கம்
நல்லெண்ணங்கள் நிறைந்த மனத்தினால் மறுபிறவியிலும் இன்ப வாழ்வு அமையும். அதுவும்கூட நல்லாரிணக்கத்தின் வலிமையினால்தான் உடையதாகும்.