குறள்

அழுக்காறாமை
குறள் # 161
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்(து)
அழுக்காறு இலாத இயல்பு
குறள் # 162
விழுப்பேற்றின் அஃதுஒப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்
குறள் # 163
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன்ஆக்கம்
பேணாது அழுக்கறுப் பான்
குறள் # 164
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து
குறள் # 165
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது
குறள் # 166
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்
குறள் # 167
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்
குறள் # 168
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்
குறள் # 169
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்
குறள் # 170
அழுக்கற்று அகன்றாரும் இல்லை; அஃதுஇல்லார்
பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்