Kural

திருக்குறள் #161
குறள்
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்(து)
அழுக்காறு இலாத இயல்பு
குறள் விளக்கம்
ஒருவன் தனது மனதில் பொறாமை என்னும் குறைபாடு அற்ற இயல்பினை, அதாவது அறிவோடு கூடிய தன்மையினை தனக்கு உபதேசிக்கப்பட்ட ஒழுக்கத்தினுடைய வழிமுறையாக ஏற்றுக்கொண்டு வளர்த்துக் கொள்வானாக.
குறள் விளக்கம் - ஒலி