குறள்

வெஃகாமை
குறள் # 171
நடுவுஇன்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்
குறள் # 172
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்
குறள் # 173
சிற்றின்பம் வெஃகி அறன்அல்ல செய்யாரே
மற்றுஇன்பம் வேண்டு பவர்
குறள் # 174
இலம்என்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மைஇல் காட்சி யவர்
குறள் # 175
அஃகி அகன்ற அறிவுஎன்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்
குறள் # 176
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்
குறள் # 177
வேண்டற்க வெஃகிஆம் ஆக்கம் விளைவயின்
மாண்டற்கு அரிதாம் பயன்
குறள் # 178
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்
குறள் # 179
அறன்அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந்து ஆங்கே திரு
குறள் # 180
இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னும் செருக்கு