Kural

திருக்குறள் #162
குறள்
விழுப்பேற்றின் அஃதுஒப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்
குறள் விளக்கம்
(நண்பர், பகைவர்) எவராக இருப்பினும், பொறாமைப்படும் தன்மையிலிருந்து நீங்கியிருக்கும் தன்மையை ஒருவன் பெறுவானேயானால் அப்பொறாமைக் குணம் இல்லாத தன்மைக்கு நிகரான அழியாத நற்பேறு வேறெதுவுமில்லை.
குறள் விளக்கம் - ஒலி