குறள்
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து
குறள் விளக்கம்
அறிவுடையோர், பொறாமைப்படுதலாகிய தவறான வழியில் செய்வதால் துன்பம் உண்டாவதை அறிந்து அப்பொறாமை காரணமாக, அறத்திற்குப் புறம்பான தீய செயல்களை உள்ளம், உரை, செயல் மூன்றினாலும் செய்யவே மாட்டார்கள்.