குறிப்பு அறிதல்
குறள் # 701
கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்கு அணி
குறள் # 702
ஐயப் படாஅது அகத்து உணர்வானைத் தெய்வத்தோடு ஒப்பக் கொளல்
குறள் # 703
குறிப்பின் குறிப்புஉணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல்
குறள் # 704
குறித்தது கூறாமைக் கொள்வாரோடு ஏனை உறுப்புஓர் அனையரால் வேறு
குறள் # 705
குறிப்பின் குறிப்புஉணரா ஆயின் உறுப்பினுள் என்ன பயத்தவோ கண்
குறள் # 706
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்
குறள் # 707
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும் காயினும் தான்முந் துறும்
குறள் # 708
முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி உற்றது உணர்வார்ப் பெறின்
குறள் # 709
பகைமையும் கேண்மையும் கண்உரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின்
குறள் # 710
நுண்ணியம் என்பார் அளக்கும்கோல் காணும்கால் கண்அல்லது இல்லை பிற

