குறள்
கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக்கு அணி
குறள் விளக்கம்
அரசன் எண்ணிய செயலை அவன் சொல்ல வேண்டிய அவசியமில்லாமலேயே அவன் முகத்தையும், கண்ணையும் தன் கண்களால் பார்த்து அறிந்து கொள்ளக் கூடிய அமைச்சன் எப்பொழுதும் வற்றாத கடல் நீரால் சூழப்பட்டுள்ள இந்த உலகத்தில் உள்ளவர்களுக்கு ஓர் அணிகலனாக விளங்குவான்.