Kural

திருக்குறள் #707
குறள்
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்
குறள் விளக்கம்
ஒருவன் ஒன்றை விரும்பியிருக்கும் தன்மையையும் வெறுத்து ஒதுக்கும் தன்மையையும் தானே முன் வந்து வெளிப்படுத்துகின்ற முகத்தைக் காட்டிலும் அறிவில் சிறந்தது வேறு ஏதாவது இருக்கின்றதா? (இல்லை என்பது கருத்து).