Kural

திருக்குறள் #709
குறள்
பகைமையும் கேண்மையும் கண்உரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்
குறள் விளக்கம்
ஒருவன் கண்பார்வைகளின் வேறுபாடுகளை அறியும் திறனைப் பெற்றிருந்தால் மற்றவர்களின் மனதிலுள்ள பகை உணர்வையும் நட்பு உணர்வையும் அவர்களது கண்களே இவருக்கு அறிவித்து விடும்.