Kural

திருக்குறள் #704
குறள்
குறித்தது கூறாமைக் கொள்வாரோடு ஏனை
உறுப்புஓர் அனையரால் வேறு
குறள் விளக்கம்
ஒருவன் தன் மனத்தில் நினைத்ததை அவன் சொல்லாமலேயே அறிந்து கொள்ளும் ஆற்றலுள்ளவரோடு ஒப்பிடும்போது அவ்வாற்றலில்லாத மற்றவர்கள் உடல் அவயவங்களால் ஒரே தன்மையுடையவராக இருந்தாலும் அறிவினால் வேறுபட்டவர்களேயாவார்கள்.