மன்னரைச் சேர்ந்துஒழுகல்
குறள் # 691
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்துஒழுகு வார்
குறள் # 692
மன்னர் விழைய விழையாமை மன்னரால் மன்னிய ஆக்கம் தரும்
குறள் # 693
போற்றின் அரியவை போற்றல்; கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது
குறள் # 694
செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்துஒழுகல் ஆன்ற பெரியா ரகத்து
குறள் # 695
எப்பொருளும் ஓரார் தொடரார்மற்று அப்பொருளை விட்டக்கால் கேட்க மறை
குறள் # 696
குறிப்புஅறிந்து காலம் கருதி வெறுப்புஇல வேண்டுப வேட்பச் சொலல்
குறள் # 697
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் கேட்பினும் சொல்லா விடல்
குறள் # 698
இளையர் இனமுறையர் என்றுஇகழார் நின்ற ஒளியோடு ஒழுகப் படும்
குறள் # 699
கொளப்பட்டேம் என்றுஎண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்குற்ற காட்சி யவர்
குறள் # 700
பழையம் எனக்கருதிப் பண்புஅல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும்

