Kural

திருக்குறள் #705
குறள்
குறிப்பின் குறிப்புஉணரா ஆயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்
குறள் விளக்கம்
தனது குறிப்பறியும் திறத்தினால் மற்றவர்களைப் பார்த்து, அவர்களது உள்ளக் கருத்தை அறிந்து கொள்ளாதவனுக்கு, அவனது அவயவங்களுள் கண்கள் இருந்தும் வேறு என்ன பயனைத் தரும்.