Kural

திருக்குறள் #708
குறள்
முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்றது உணர்வார்ப் பெறின்
குறள் விளக்கம்
தன் மனதில் உள்ளவற்றைக் குறிப்பால் அறிந்து அவ்விஷயத்தை உணர்ந்து நீக்கக்கூடியவனை ஒருவன் அடைந்துவிட்டால் அவர் தன்முகத்தைப் பார்க்கும்படியும் தானும் அவர் முகத்தைப் பார்க்கும்படியும் நின்றாலே போதுமானதாகும்.