ஆள்வினை உடைமை
குறள் # 611
அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்
குறள் # 612
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு
குறள் # 613
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு
குறள் # 614
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை வாள்ஆண்மை போலக் கெடும்
குறள் # 615
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்துஊன்றும் தூண்
குறள் # 616
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்
குறள் # 617
மடிஉளாள் மாமுகடி என்ப மடிஇலான் தாள்உளாள் தாமரையி னாள்
குறள் # 618
பொறிஇன்மை யார்க்கும் பழிஅன்று அறிவுஅறிந்து ஆள்வினை இன்மை பழி
குறள் # 619
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்
குறள் # 620
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவுஇன்றித் தாழாது உஞற்று பவர்

