குறள்
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்
குறள் விளக்கம்
நாட்டு மக்களை மேலும் மேலும் சிறந்த உயர்ந்த குடிமக்களாக்க விரும்புகின்ற தலைவன், சோம்பலைச் சோம்பலாகவே (அனைத்து மேன்மைகளையும் கெடுக்கும் கொடிய குறைபாடு என்றுணர்ந்து), முயற்சியோடு செயல்புரிந்து ஒழுக வேண்டும், வாழ வேண்டும்.