குறள்
படியுடையார் பற்றுஅமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது
குறள் விளக்கம்
ஆட்சி அல்லது பெரும் பொறுப்பை உடையவர்களுக்குப் பொருள்நலம், துணைநலம் அமைந்திருந்தாலும் சோம்பலுடையவராய் இருந்தால் அந்நலங்களால் அடைய வேண்டிய சிறந்த பயனை அனுபவிக்க இயலாது.