கண்ணோட்டம்
குறள் # 571
கண்ணோட்டம் என்னும் கழி பெருங்காரிகை உண்மையான் உண்டுஇவ் வுலகு
குறள் # 572
கண்ணோட்டத் துள்ள துலகிய லஃதிலா ருண்மை நிலக்குப் பொறை
குறள் # 573
பண்என்னாம் பாடற்கு இயையின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்?
குறள் # 574
உளபோல் முகத்து எவன்செய்யும் அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண்?
குறள் # 575
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல் புண்ணென்று உணரப் படும்
குறள் # 576
மண்ணோடு இயைந்த மரத்தனையர் கண்ணோடு இயைந்து கண்ணோ டாதவர்
குறள் # 577
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர்; கண்ணுடையார் கண்ணோட்டம் இன்மையும் இல்
குறள் # 578
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்து இவ்வுலகு
குறள் # 579
ஒறுத்துஆற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப் பொறுத்துஆற்றும் பண்பே தலை
குறள் # 580
பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்

