குறள்
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேய் கண்டன்ன துடைத்து
குறள் விளக்கம்
தன்னைக் காண விரும்புகிறவர்களை நீண்ட நேரம் காக்க வைத்து (கண்டால்) கடுகடுத்த முகத்துடன் பார்ப்பவனுடைய பெரிய செல்வமானது பேயால் காணப்பட்டதைப்போல ஆகும். அத்தகைய அரசன் பேய்க்கு நிகரானவன் என்பது கருத்து.