குறள்
தக்காங்கு நாடி தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து
குறள் விளக்கம்
ஒருவன் குற்றச் செயல்களைச் செய்தால் அதனை நடுநிலையுடன் ஆராய்ந்து மீண்டும் செயல்களைச் செய்யாதபடி குற்றத்திற்கேற்ற தண்டனை தருபவனே முறையாக நாட்டை ஆளும் அரசன் எனப்படுவான்.