Kural

திருக்குறள் #563
குறள்
வெருவந்த செய்துஒழுகும் வெங்கோலன் ஆயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்
குறள் விளக்கம்
அரசன், மக்கள் அஞ்சும் வண்ணம் செயல்களைச் செய்கின்ற கொடுங்கோலாக நடந்துகொள்வானேயானால் கெட்டுப்போவான். பதவி இழந்து துன்பப்படுவான்.