Kural

திருக்குறள் #564
குறள்
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்
குறள் விளக்கம்
நம் அரசன் மோசமானவன் என்று மக்களால் பேசப்படுகிற துன்பம் தரும் சொல்லைக் கேட்கும் அரசன் வாழ்நாள் குறைந்து விரைவில் அனைத்துச் செல்வங்களையும் இழந்துவிடுவான்.