குறள்
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர்
குறள் விளக்கம்
செல்வம் உடையவர் முன்பு செல்வம் இல்லாதவர் செல்வத்தைக் கேட்டுப் பெறுதல்போல அறிவை அருளும் ஆசிரியர் முன்பு கல்வி கற்க விரும்பிப் பணிந்து நின்று கற்பவர் உயர்ந்தவராவார். ஆசிரியரிடம் பணிவதற்கு விரும்பாமல் கற்காதவர் தாழ்ந்தவராகக் கருதப்படுவார்.