குறள்
யாதானும் நாடாமால் ஊராமால் என்ஒருவன்
சாந்துணையும் கல்லாத வாறு
குறள் விளக்கம்
கற்பவனுக்குத் தனது நாடும், தனது ஊரும் மட்டுமல்லாமல் எந்த நாடாக இருந்தாலும் அதுவும் தனது நாடாகவே ஆகும். எந்த ஊராக இருந்தாலும் அதுவும் தனது ஊராகவே ஆகும். எனவே மனித உடலில் வாழும் உயிர் உடலிலிருந்து பிரியும் வரையிலும் கற்காமல் காலத்தைக் கழிப்பது எதை எண்ணியோ?