இறைமாட்சி
குறள் # 381
படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு
குறள் # 382
அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தற்கு இயல்பு
குறள் # 383
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலன்ஆள் பவர்க்கு
குறள் # 384
அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா மானம் உடையது அரசு
குறள் # 385
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு
குறள் # 386
காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம்
குறள் # 387
இன்சொலால் ஈத்துஅளிக்க வல்லார்க்குத் தன்சொலால் தான்கண் டனைத்துஇவ் வுலகு
குறள் # 388
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறைஎன்று வைக்கப் படும்
குறள் # 389
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு
குறள் # 390
கொடைஅளி செங்கோல் குடிஓம்பல் நான்கும் உடையான்ஆம் வேந்தர்க்கு ஒளி

