குறள்
கற்க கசடறக் கற்பவை; கற்றபின்
நிற்க அதற்குத் தக
குறள் விளக்கம்
தனக்கும் ஸமுதாயத்திற்கும் நன்மையை உபதேசிக்கின்ற கற்பதற்குத் தகுதியான நூல்களை ஐயம், திரிவு அற தக்க ஆசிரியர் வாயிலாகக் கற்பாயாக! கற்றுத் தெளிவதோடு மட்டுமல்லாமல் அக்கல்வியினால் பெற்ற அறிவிற்கு ஏற்ப எண்ணங்களிலும், நிற்பாயாக! அல்லது நிலைத்து நின்று செயல்படுவாயாக!