குறள்
கண்உடையர் என்பவர் கற்றோர்; முகத்து இரண்டு
புண்உடையர் கல்லா தவர்
குறள் விளக்கம்
கண்களை உடையவர் என்று உயர்த்துச் சொல்லப்படுபவர் பயன்தரும் அறிவு நூல்களை நன்கு கற்றவரேயாவார். அதற்கு மாறாக கல்லாதவர் என்று தாழ்த்திச் சொல்லப்படுபவர் முகத்தில் இரண்டு புண்களையுடையவர் (கண்ணில்லாதவர்).