கயமை
குறள் # 1071
மக்களே போல்வர் கயவர்; அவரன்ன ஒப்பார் யாம்கண்டது இல்
குறள் # 1072
நன்றுஅறி வாரின் கயவர் திருஉடையர்; நெஞ்சத்து அவலம் இலர்
குறள் # 1073
தேவர் அனையர் கயவர் அவரும்தாம் மேவன் செய்தொழுக லான்
குறள் # 1074
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்
குறள் # 1075
அச்சமே கீழ்களது ஆசாரம்; எச்சம் அவாஉண்டேல் உண்டாம் சிறிது
குறள் # 1076
அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட மறைபிறர்க்கு உய்த்துஉரைக்க லான்
குறள் # 1077
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுஉடைக்கும் கூன்கையர் அல்லா தவர்க்கு
குறள் # 1078
சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ்
குறள் # 1079
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடிக்காண வற்றாகும் கீழ்
குறள் # 1080
எற்றிற்கு உரியர் கயவர்ஒன்று உற்றக்கால் விற்றற்கு உரியவர் விரைந்து
