இரவு அச்சம்
குறள் # 1061
கரவாது உவந்துஈயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி யுறும்
குறள் # 1062
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகுஇயற்றி யான்!
குறள் # 1063
இன்மை இடும்பை இரந்துதீர் வாம்என்னும் வன்மையின் வன்பாட்டது இல்
குறள் # 1064
இடம்எல்லாம் கொள்ளாத் தகைத்தே இடம்இல்லாக் காலும் இரவுஒல்லாச் சால்பு
குறள் # 1065
தெள்நீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது உண்ணலின் ஊங்குஇனியது இல்
குறள் # 1066
ஆவிற்கு நீர்என்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்தது இல்
குறள் # 1067
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பி கரப்பான் இரவன்மின் என்று!
குறள் # 1068
இரவுஎன்னும் ஏமாப்புஇல் தோணி கரவுஎன்னும் பார்தாக்கப் பக்கு விடும்
குறள் # 1069
இரவுஉள்ள உள்ளம் உருகும்; கரவுஉள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும்
குறள் # 1070
கரப்பவர்க்கு யாங்குஒளிக்கும் கொல்லோ இரப்பவர் சொல்லாடப் போஒம் உயிர்

