Kural

திருக்குறள் #1076
குறள்
அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துஉரைக்க லான்
குறள் விளக்கம்
கயவர் தாம் கேட்டறிந்த மறைபொருளை மற்றவர்களுக்கு வலியச் சென்று சொல்கின்ற காரணத்தினால் அறையப்படுகின்ற பறைக்கு ஒப்பாவர்.