Kural

திருக்குறள் #1075
குறள்
அச்சமே கீழ்களது ஆசாரம்; எச்சம்
அவாஉண்டேல் உண்டாம் சிறிது
குறள் விளக்கம்
கீழ்மக்களது ஒழுக்கத்திற்குக் (காரணம்) அச்சமே ஆகும். எஞ்சியவற்றில் (பொருள் முதலானவை மீது) ஆசை உண்டாகுமானால் அதனை அடையும்வரை (சிறிது நேரம்) அந்த ஒழுக்கம் நிலைத்திருக்கும்.