Kural

திருக்குறள் #1074
குறள்
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்
குறள் விளக்கம்
கீழோராகிய கயவர் (தம்மைக் காட்டிலும் கீழ்நிலையில்) தமக்கு அடங்கி நடப்பவரை கண்டால் அவரைக் காட்டிலும் தாம் உயர்ந்த நிலையில் இருப்பதாக எண்ணி இறுமாப்படைவர்.