Kural

திருக்குறள் #1066
குறள்
ஆவிற்கு நீர்என்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல்
குறள் விளக்கம்
பசுவிற்கு நீர் வேண்டும் என்று (அறம் நோக்கி) இரந்து கேட்டாலும் அவ்வாறு இரத்தலைக் காட்டிலும் இழிவானது வேறு எதுவும் இல்லை.