Kural

திருக்குறள் #1013
குறள்
ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு
குறள் விளக்கம்
உயிர்கள் அனைத்தும் உடல்களைத் தமக்கு இருப்பிடமாகக் கொண்டவை. (அது போல) நற்குணங்களின் நிறைவானது, நாணம் என்று சொல்லப்படுகின்ற நற்பண்பைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்டுள்ளது.