Kural

திருக்குறள் #1011
குறள்
கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற
குறள் விளக்கம்
நாணம் எனப்படுவது இழிந்த செயலைச் செய்வதற்கு வெட்கப்படுதலாகும். அழகிய நெற்றியை உடைய குலப்பெண்களின் நாணமானது வேறு வகையானது.