Kural

திருக்குறள் #1017
குறள்
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாண்ஆள் பவர்
குறள் விளக்கம்
நாணத்தின் சிறப்பை அறிந்து, அதனைக் கடைப்பிடித்து, ஒழுகுபவர் நாணத்தைக் காக்கும் பொருட்டுத் தம் உயிரை(க்கூட) விட்டுவிடுவர். (ஆனால்) உயிரைப் பெரிதாக எண்ணி நாணத்தை விடமாட்டார்.