குறள்

மருந்து
குறள் # 941
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று
குறள் # 942
மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றின் உணின்
குறள் # 943
அற்றால் அளவுஅறிந்து உண்க; அஃதுடம்பு
பெற்றான் நெடிதுஉய்க்கும் ஆறு
குறள் # 944
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல
துய்க்க துவரப் பசித்து
குறள் # 945
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துஉண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு
குறள் # 946
இழிவுஅறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபே இரையாண்கண் நோய்
குறள் # 947
தீயளவு அன்றித் தெரியான் பெரிதுஉண்ணின்
நோயளவு இன்றிப் படும்
குறள் # 948
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
குறள் # 949
உற்றான் அளவும் பிணிஅளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்
குறள் # 950
உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வான்என்று
அப்பால்நாற் கூற்றே மருந்து