குறள்

குடிமை
குறள் # 951
இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு
குறள் # 952
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்
குறள் # 953
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகைஎன்ப வாய்மைக் குடிக்கு
குறள் # 954
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்
குறள் # 955
வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று
குறள் # 956
சலம்பற்றிச் சால்புஇல செய்யார்மாசு அற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்
குறள் # 957
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து
குறள் # 958
நலத்தின்கண் நார்இன்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்
குறள் # 959
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும்; காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்
குறள் # 960
நலம்வேண்டின் நாண்உடைமை வேண்டும்; குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு