குறள்
அற்றால் அளவுஅறிந்து உண்க; அஃதுடம்பு
பெற்றான் நெடிதுஉய்க்கும் ஆறு
குறள் விளக்கம்
முன் உண்ட உணவு செரித்துவிட்டதை அறிந்து (பிறகு உண்ண வேண்டிய உணவின்) அளவையும் அறிந்து உண்ண வேண்டும். அவ்வாறு உண்ணுதல், (பெறுதற்கரிய) உடலைப் பெற்றவன் நீண்ட காலம் இதில் இன்பமாக வாழ்வதற்குரிய வழிமுறையாகும்.