குறள்
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று
குறள் விளக்கம்
ஆயுர்வேதம் முதலான நூலோர் வாதம் முதலாக வரிசைப்படுத்திக் கூறிய வாதம், பித்தம், சிலேத்துமம் (கபம்) என்ற உடலில் உள்ள காற்று, நெருப்பு, நீர் தத்துவங்கள் ஆகிய மூன்றும் (உடலில், அளவுக்கு) மிகுந்தாலும் குறைந்தாலும் நோயை உண்டாக்கும்.