Kural

திருக்குறள் #944
குறள்
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல
துய்க்க துவரப் பசித்து
குறள் விளக்கம்
முன் உண்ட உணவு செரித்ததை அறிந்து நல்ல பசி தோன்றிய பிறகு மாறுபாடு இல்லாத உணவைக் கடைப்பிடித்துச் சுவைத்து உண்ண வேண்டும்.