குறள்
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துஉண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு
குறள் விளக்கம்
(உடலின் தன்மை, கால இயல்பு, சுவை வீரியம் ஆகியவற்றால் ஏற்படும்) மாறுபாடு இல்லாத உணவை (தன்னுடைய மனம் வேண்டிய அளவை) மறுத்து அளவாக உண்டால், உடலில் வாழ்கின்ற உயிருக்கு நோய்களால் துன்பம் ஏற்படுதல் என்பது இல்லை.