குறள்

ஒற்றாடல்
குறள் # 581
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றெங்க மன்னவன் கண்
குறள் # 582
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்
குறள் # 583
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல்
குறள் # 584
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று
குறள் # 585
கடாஅ உருவொடு கண்ணுஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று
குறள் # 586
துறந்தார் படிவத்தர் ஆகி இறந்துஆராய்ந்து
என்செயினும் சோர்வுஇலது ஒற்று
குறள் # 587
மறந்தவை கேட்கவற்று ஆகி அறிந்தவை
ஐயப்படு இல்லதே ஒற்று
குறள் # 588
ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்
குறள் # 589
ஒற்றுஒற்று உணராமை ஆள்க; உடன்மூவர்
சொல்தொக்க தேறப் படும்
குறள் # 590
சிறப்புஅறிய ஒற்றின்கண் செய்யற்க; செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை