Kural

திருக்குறள் #582
குறள்
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்
குறள் விளக்கம்
நட்பு, பகை, இரண்டுமற்றவர்கள் ஆகிய அனைவரிடத்திலும் நிகழ்கின்ற அனைத்து நிகழ்வுகளையும் நாள்தோறும் இடைவிடாது தொடர்ந்து ஒற்றர்கள் வாயிலாக விரைவாக அறிந்துகொண்டு (அதற்கேற்றவண்ணம் செயல்படுவது) அரசனுக்குரிய பொறுப்பான கடமையாகும்.